ரூ.23½ லட்சத்தில் வளர்ச்சி பணிகள்


ரூ.23½ லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
x
தினத்தந்தி 21 Dec 2022 6:45 PM GMT (Updated: 21 Dec 2022 6:46 PM GMT)

திம்ஜேப்பள்ளி ஊராட்சியில் ரூ.23½ லட்சத்தில் வளர்ச்சி பணிகளை ஒன்றியக்குழு தலைவர் தொடங்கிவைத்தார்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை அருகே உள்ள திம்ஜேப்பள்ளி ஊராட்சி குட்டூர் கிராமத்தில் ரூ.10 லட்சத்தில் தடுப்பு சுவர், ரூ.3½ லட்சத்தில் பைப்லைன், ரூ.3 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கப்படுகிறது. இதேபோன்று புதூர் கிராமத்தில் ரூ.4 லட்சத்தில் சிமெண்டு சாலை, அடக்கம் கிராமத்தில் ரூ.3 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கப்படுகிறது. திம்ஜேப்பள்ளி ஊராட்சியில் மொத்தம் ரூ.23½ லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கூட்டுறவு சங்க தலைவர் மாதையன், வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story