திருத்தங்கலில் வளர்ச்சி பணிகள்


திருத்தங்கலில் வளர்ச்சி பணிகள்
x

திருத்தங்கலில் வளர்ச்சி பணிகள் குறித்து மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கலில் சுக்கிரவார்பட்டி சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 2-வது வார்டுக்கு உட்பட்ட ஸ்டேண்டர்டு காலனியில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி நடந்து வருகிறது. 7-வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு ரத வீதியில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 12-வது வார்டுக்கு உட்பட்ட பழனிச்சாமி நாடார் வீதியில் உள்ள கழிப்பறைகள் பராமரிப்பு பணியும், அதே வீதியில் பேவர்பிளாக் கல் பதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதேபோல் 9 மற்றும் 10-வது வார்டுகளில் பேவர்பிளாக் கல் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 20-வது வார்டுக்கு உட்பட்ட கண்ணகி காலனியில் கழிப்பறை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மேயர் சங்கீதா இன்பம் நேற்று காலை திடீர் ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும், விரைவாகவும் நடக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது துணை மேயர் விக்னேஷ் பிரியாகாளிராஜன், மண்டல தலைவர் குருசாமி, கவுன்சிலர்கள் ஆ.செல்வம், சேதுராமன், சசிக்குமார், துரைப்பாண்டி, பொன் மாடத்தி மற்றும் உதவி என்ஜினீயர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story