வெம்பக்கோட்டை பகுதிகளில் வளர்ச்சி பணிகள்


வெம்பக்கோட்டை பகுதிகளில் வளர்ச்சி பணிகள்
x

ெவம்பக்கோட்டை பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர்

தாயில்பட்டி,


ெவம்பக்கோட்டை பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

வளர்ச்சி பணிகள்

வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். வெம்பக்கோட்டை அணையினை பார்வையிட்டு. வெம்பக்கோட்டை அணைக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அந்த அணையில் இருந்த தண்ணீா் வினியோகம் குறித்தும் கேட்டறிந்தார்.

இதையடுத்து வெம்பக்கோட்டையில் நடைபெற்று பெரும் 2-வது அகழாய்வு பணியினை பார்வையிட்டார். அப்போது அங்கு முதலாம் கட்ட அகழாய்வு பணியில் எடுக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டது.

அகழாய்வு

அதில் சுடுமண்ணால் ஆன மணிகள், கல்பந்துகள், பதக்கம், சங்கு மணிகள், முத்திரைகள், சுடுமண்ணால் ஆன அச்சுகள், திமிர் காளை, காதணி, சங்கு வளையல், தந்தத்தில் ஆன பதக்கம், செப்பு காசு, தங்க அணிகலன், உள்ளிட்ட பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதனை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டார். அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து தொல்லியல் துறை அதிகாரி பொன் பாஸ்கரிடம் கேட்டறிந்தார். வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, மியாவாக்கி வாடுகள், தாலுகா அலுவலக பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

ஆய்வின் போது வெம்பக்கோட்டை யூனியன் ஆணையாளர் செல்வராஜன், வட்டாட்சியர் ரெங்கநாதன், துணை தாசில்தார் அகத்தீஸ்வரர், வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் கோவிந்தன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story