சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி


சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
x

பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) கார்த்திகை மாத பிரதோஷம் ஆகும். கார்த்திகை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு மழை பெய்யாவிட்டால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். அதேநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். சூழ்நிலைக்கு தகுந்தவாறு பக்தர்கள் தங்களின் சொந்த ஊர்களில் இருந்து கோவிலுக்கு வர வேண்டுமெனவும் வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.Next Story