திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழாபக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழாவில் பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகப்பட்டினம்
வேதாரண்யம் அருகே தோப்புத்துறை திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மகாபாரத கதை நிகழ்ச்சி நடந்து வந்தது. அரவாண் களப்பலி, அர்ச்சுணன் தபசு, திரவுதி அம்மன் கூந்தல் முடிதல், பரிவார தேவதைகளுடன் அன்னபட்சி வாகனத்தில் அம்மன் வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. இதையடுத்து பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story