சோளிங்கர் கோவிலில் பக்தர்கள் ரூ.25 லட்சம் உண்டியல் காணிக்கை
சோளிங்கர் கோவிலில் பக்தர்கள் ரூ.25 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தி உள்ளனர்.
ராணிப்பேட்டை
சோளிங்கர்
சோளிங்கர் கோவிலில் பக்தர்கள் ரூ.25 லட்சம் உண்டியல் காணிக்கைசெலுத்தி உள்ளனர்.
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோவில் வளாகத்தில் யோக நரசிம்மர் கோவில், யோக ஆஞ்சநேயர் கோவில் தக்கான்குளம் ஆஞ்சநேயர் கோவில், மற்றும் ஊர் கோவிலான லட்சுமி நரசிம்மர் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இந்த பணிகள் கோவில் உதவி ஆணையர் ஜெயா தலைமையில் நடைபெற்றது. இதில் ரூ.24 லட்சத்து 90 ஆயிரத்து 740 ரூபாய் ரொக்கமும், தங்கம் 102 கிராமும், வெள்ளி 297 கிராமும் இருந்தது.
இவை கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அப்போது திருக்கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ், கிஷோர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story