பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்


பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
x

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திண்டுக்கல்

அறுபடை வீடுகளில், 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். வார விடுமுறை, முகூர்த்தம் உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் வருகை அதிகம் காணப்படும். அதன்படி வார விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே அடிவாரம் பாதவிநாயகர் கோவில், மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் காவடி எடுத்து கிரிவீதிகளை சுற்றி வந்தனர். மேலும் முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தற்போது ரோப்கார் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே மின்இழுவை ரெயில் மூலம் செல்ல பக்தர்கள் குவிந்ததால் கவுண்ட்டரை தாண்டி நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.


Next Story