ஆடி அமாவாசையையொட்டி சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள் - போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்


ஆடி அமாவாசையையொட்டி சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள் - போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்
x

பக்தர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவிலில் வரும் 16-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு, 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பக்தர்கள் தங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் நேற்று முதலே பக்தர்கள் அடுப்பு, பாத்திரம் உள்ளிட்ட உடமைகளுடன் தங்கள் குடும்பத்தினரோடு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வாகனங்களில் வருகை தந்தனர். இதனிடையே போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து பக்தர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கலைத்த நிலையில், பக்தர்கள் தங்கள் உடமைகளுடன் பாபநாசத்திலேயே சாலையோரமாக தங்கியுள்ளனர்.



Next Story