ஆலங்குடி குருபகவான் கோவிலில் ரஷிய நாட்டு பக்தர்கள் சாமி தரிசனம்


ஆலங்குடி குருபகவான் கோவிலில் ரஷிய நாட்டு பக்தர்கள் சாமி தரிசனம்
x

ரஷிய நாட்டை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு குருபரிகார ஹோமம், உற்சவர் தெட்சிணாமூர்த்தி சன்னதியில் அபிஷேகம், ஆராதனைகள் செய்து பக்தி பரவசத்துடன் குருபகவானை வழிபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரக தலங்களில் குருபகவானுக்குரிய தலமாக இக்கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் வாரந்தோறும் வியாழக்கிழமை குருவார வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி நேற்று வியாழக்கிழமை குருவார வழிபாடு நடந்தது. குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடந்தன.

இதில் ரஷிய நாட்டை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு குருபரிகார ஹோமம், உற்சவர் தெட்சிணாமூர்த்தி சன்னதியில் அபிஷேகம், ஆராதனைகள் செய்து பக்தி பரவசத்துடன் குருபகவானை வழிபட்டனர்.


Next Story