நீடாமங்கலம் வழியாக வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை
நீடாமங்கலம் வழியாக வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை
திருவாரூர்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நடக்கிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக திண்டுக்கல், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆண்டு தோறும் நடைப்பயணமாகவும், மாதா, ஏசுநாதர் போன்ற உருவங்களை மின்விளக்குகளால் அலங்கரித்து வீதிஉலாவாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்று ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் ஆண்டுதோறும் திருவிழாவிற்கு வந்து செல்கின்றனர். நேற்றுமுன்தினம் ஏராளமான பக்தர்கள் தேர்பவனியுடன் நீடாமங்கலம் வழியாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்றனர். அப்போது மாதாவின் சப்பரங்களை சில பக்தர்கள் இழுத்து சென்றனர்.
Related Tags :
Next Story