ராமேஸ்வரம் முதல் காசி வரை பக்தர்கள் ஆன்மிக பயணம்


ராமேஸ்வரம் முதல் காசி வரை பக்தர்கள் ஆன்மிக பயணம்
x

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமஸே்வரம் முதல் காசி வரை பக்தர்கள் ஆன்மிக பயணத்தை கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமஸே்வரம் முதல் காசி வரை பக்தர்கள் ஆன்மிக பயணத்தை கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆன்மிக பயணம்

தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்ததன்படி தமிழகம் முழுவதிலும் இருந்து இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு, ராமேஸ்வரம் முதல் காசி வரை இலவசமாக ஆன்மிகப் பயணம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் மயிலாடுதுறை இணை ஆணையர் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 12 பக்தர்கள் ஆன்மிக பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோவிலில் இருந்து நேற்று காலை வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

முன்னதாக, கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன், ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளவுள்ள பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, ஆன்மிக பயணத்தை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story