பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்


பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்
x
தினத்தந்தி 10 Oct 2022 1:00 AM IST (Updated: 10 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் தரிசனம் பக்தர்கள் குவிந்தனர். இதனால் 2 மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது.

திண்டுக்கல்

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். அதுமட்டுமின்றி முகூர்த்தம், மாதப்பிறப்பு, மாதகார்த்திகை, வார விடுமுறை நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். அந்தவகையில் நேற்று வாரவிடுமுறை நாளையொட்டி காலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன்களில் தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.


இதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்லும் படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் பொது, கட்டளை, கட்டண தரிசனம் உள்ளிட்ட தரிசன வழிகள், மலைக்கோவில் வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


1 More update

Next Story