அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்


அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மார்கழி மாத அமாவாசையையொட்டி அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடினர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் கோவில் விளங்குகிறது. அங்குள்ள தீர்த்தக்கிணறுகள் மற்றும் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராட தை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாகாளய அமாவாசை மற்றும் மாதாந்திர அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைேமாதும்.

மார்கழி மாதத்தின் அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தக்கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் சாமி பிரகாரத்தில் இருந்து மூன்றாம் பிரகாரம் வரையிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனத்துக்கு காத்திருந்தனர்.

இதேபோல் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு தேவிபட்டினத்தில் உள்ள நவபாஷான கடல் மற்றும் திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலிலும் புனித நீராட ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.


Next Story