ஓய்வறை திறக்கப்படாததால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அவதி

ஓய்வறை திறக்கப்படாததால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அவதி
x

சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோவில் மலை அடிவாரத்தில் ஓய்வறை கட்டப்பட்டும் திறக்கப்படாததால் பக்தர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோவில் மலை அடிவாரத்தில் ஓய்வறை கட்டப்பட்டும் திறக்கப்படாததால் பக்தர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சோளிங்கர் திவ்ய தேசத்தில் சின்னமலையான யோக ஆஞ்சநேயர் கோவில் அடிவாரத்தில் பக்தர்கள் தங்கும் ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஓய்வறையை இன்னும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் மரத்தடியிலும் தெரு ஓரங்களிலும் தங்கி ஓய்வெடுத்து சாமி தரிசனம் செய்கின்றனர். சோளிங்கர் நகராட்சி நிர்வாகமும், அறநிலையத்துறையும் நடவடிக்கை மேற்கொண்டு பக்தர்கள் தங்கும் ஓய்வறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

1 More update

Next Story