நரசிம்மர் கோவிலில் லட்சக்கணக்கில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு
ஆரணி நரசிம்மர் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி பக்தர்கள் லட்சக்கணக்கில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலை
ஆரணி
ஆரணி நரசிம்மர் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி பக்தர்கள் லட்சக்கணக்கில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.
ஆரணி சைதாப்பேட்டை நாடக சாலை பேட்டை தெருவில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு கமண்டல நாக நதிக்கரை அருகே அமைந்துள்ள காளி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி பின்னர் நூதன புஷ்பலக்கில் நரசிம்மரை அலங்கரித்து திருவீதி உலா வந்தனர்.
அப்போது நேர்த்திக்கடனாக பக்தர்கள் லட்சக்கணக்கில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.
Related Tags :
Next Story