4 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்


4 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரம்பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரம்பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கிவைத்தார்.

குடற்புழு நீக்க மாத்திரை

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் திருப்பத்தூர் எஸ்.ஆர்.டி.பி.எஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் இல்லம் சார்பில் தேசிய குடற்புழு நீக்கம் நாளையொட்டி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைநை தாங்கி மாத்திரை வழங்கி தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நமது மாவட்டத்தில் 18,633 மாணவர்கள் உள்ளனர். அவர்களின் வயதிற்கு ஏற்ப எடை, உயரம், வளர்ச்சி குறித்து டாக்டர்கள் பரிசோதனை செய்யதனர். அதில் பெரும்பாலான மாணவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டது. இதற்கு உணவு முறைகள், தொற்று, குடற் புழுக்கள் போன்றவையே காரணங்களாக சொல்லப்படுகிறது.

1.20 லட்சம் பேருக்கு

இதில் 1 முதல் 19 வயது வரையுள்ள 3,18,457 ஆண், பெண் இருபாலருக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள 1,02,307 பெண்களுக்கும் என மொத்தம் 4 லட்சத்து 20 ஆயிரத்து 764 பேருக்கு மாத்தினர வழங்கப்பட உள்ளது.

மாவட்டத்தில் இப்பணியை செயல்படுத்த 37 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 952 அங்கன்வாடி மையங்கள், 162 துணை சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தங்கும்விடுதிகள், மலைவாழ்பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் ஆகிய இடங்களில் முகாம் நடைபெற்றது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் துணை சுகாதார பணிகள் துணை இயக்குன் செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி, எஸ்.ஆர்.டி.பி.எஸ். பெண்கள் மற்றும் குழந்தைகள் இல்ல இயக்குனர் தமிழரசி, மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story