தர்மபுரி: காளியம்மன் கோவில் தேர் சாய்ந்து விபத்து -10 பேர் காயம்


x

தர்மபுரி அருகே காளியம்மன் கோவில் தேர் சாய்ந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் தேர்த்திருவிழாவின் போது திடீரென தேர் கவிழ்ந்தது. அப்போது தேர் பக்தர்கள் மீது விழுந்ததில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் விபத்தில பலத்த காயமடைந்த ஒருசிலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story