மின் கட்டண உயர்வை கண்டித்து தர்மபுரியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


மின் கட்டண உயர்வை கண்டித்து  தர்மபுரியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

மின் கட்டண உயர்வை கண்டித்து தர்மபுரியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெறகோரியும் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் வெங்கட்ராஜ், ஐஸ்வர்யம் முருகன், பிரவீன், மாவட்ட பொருளாளர் சிவகுமார், மாவட்ட துணை தலைவர்கள் சிவசக்தி, ஐவண்ணன், முரளி, கிருத்திகா, ராஜேந்திரன், சிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத்தலைவர் சோபன் வரவேற்று பேசினார். மாவட்ட பார்வையாளர் முருகேசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் அருணகிரி, மாவட்ட தலைவர் இமானுவேல், மாவட்ட செயலாளர் டாக்டர் சுப்ரமணியன், மாவட்ட அணி தலைவர்கள் மதியழகன், மவுனகுரு, காவேரிவர்மன், வெற்றி, சங்கீதா, களீர் கண்ணன், நகர தலைவர் ஜிம் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி நகர தலைவர் ஜிம் சக்திவேல் நன்றி கூறினார்.


Next Story