தர்மபுரிக்குசரக்கு ரெயிலில் 1,306 டன் உர மூட்டைகள் வந்தன6 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது


தர்மபுரிக்குசரக்கு ரெயிலில் 1,306 டன் உர மூட்டைகள் வந்தன6 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது
x
தினத்தந்தி 13 Feb 2023 12:30 AM IST (Updated: 13 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், நாமக்கல் ஆகிய 6 மாவட்ட தனியார் உரக்கடைகளுக்கு வினியோகம் செய்ய யூரியா 930 டன், காம்ப்ளக்ஸ் உரம் 376 டன் என மொத்தம் 1,306 டன் உர மூட்டைகள் மங்களூருவில் இருந்து சரக்கு ரெயில் மூலம் தர்மபுரி ரெயில் நிலையம் வந்தது. யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் லாரிகள் மூலம் 6 மாவட்டங்களில் உள்ள தனியார் உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பப்படும் பணியினை தர்மபுரி மாவட்ட வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தர்மபுரி மாவட்ட தனியார் உரக்கடைகளுக்கு 203 டன் யூரியாவும், 80 டன் காம்ப்ளக்ஸ் உரங்களும், கிருஷ்ணகிரி மாவட்ட தனியார் உரக்கடைகளுக்கு 504 டன் யூரியாவும், 234 டன் காம்ப்ளக்ஸ் உரங்களும், திருப்பத்தூர் மாவட்ட தனியார் உரக்கடைகளுக்கு 87 டன் யூரியாவும், 10 டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோன்று திருவண்ணாமலை மாவட்ட தனியார் உரக்கடைகளுக்கு 37 டன் யூரியாவும், 15 டன் காம்ப்ளக்ஸ் உரங்களும், நாமக்கல் மாவட்ட தனியார் உரக்கடைகளுக்கு13 டன் யூரியாவும், 7 டன் காம்ப்ளக்ஸ் உரங்களும், சேலம் மாவட்ட தனியார் உரக்கடைகளுக்கு 86 டன் யூரியாவும், 30 டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டது. ஆய்வின் போது எம்.சி.எப். விற்பனை மேலாளர் கோபால், மொத்த விற்பனையாளர் பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story