தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் ஆண்டு முழுவதும்கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும்தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் ஆண்டு முழுவதும்கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும்தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 28 May 2023 7:00 PM GMT (Updated: 28 May 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட அமைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்று பேசினார். பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கீரை விசுவநாதன், முன்னாள் எம்.பி.க்கள் எம்.ஜி.சேகர், தாமரைச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் தர்மசெல்வன், மாவட்ட துணைச் செயலாளர்கள் உமாசங்கர், ரேணுகா தேவி, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் பேசிய அமைச்சர், சட்டமன்றத் தொகுதி வாரியாக புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை சிறப்பாக முடித்த நிர்வாகிகளை பாராட்டினார். இந்தப் பணியை முடிக்காத நிர்வாகிகள் 3 நாட்களுக்குள் முடித்து காட்ட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும். வருகிற 3-ம் தேதி நூற்றாண்டு விழாவின் தொடக்க நாளில் மாவட்ட முழுவதும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் கட்சியின் புதிய கொடிகள் ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வேலுமணி, சோலை மணி, நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், சேட்டு, வைகுந்தன், மடம்முருகேசன், செல்வராஜ், சபரிநாதன், கருணாநிதி, முன்னாள் நகர செயலாளர் அன்பழகன், சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் முத்துலட்சுமி, கவுதம், பொன் மகேஸ்வரன், சேட்டு முனியப்பன், பேரூராட்சி செயலாளர்கள் வீரமணி, சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தங்கமணி நன்றி கூறினார்


Next Story