தர்மபுரி: சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் லாரி மோதல் - 2 பேர் காயம்


தர்மபுரி: சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் லாரி மோதல் - 2 பேர் காயம்
x
தினத்தந்தி 29 July 2022 7:35 PM IST (Updated: 29 July 2022 7:36 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் லாரி மோதிய விபத்தல் 2 பேர் காயம் அடைந்தனர்.

நல்லம்பள்ளி,

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு இரும்பு காயில் பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக இன்று காலை வந்தது.

லாரியை அரவாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாலு(வயது50) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிளீனர் சீனிவாசன்(40) என்பவர் உடன் வந்தார்.

அப்போது தொப்பூர் கணவாய் இரட்டைப் பாலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி முன்னாள் சென்ற மற்றொரு லாரியின் பின் பகுதியில் உரசி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஏரி நின்றது.

இந்த விபத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

இந்த விபத்தால் தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story