கங்கைகொண்டான் அருகே 3 கிராம மக்கள் தர்ணா போராட்டம்


கங்கைகொண்டான் அருகே 3 கிராம மக்கள் தர்ணா போராட்டம்
x

கங்கைகொண்டான் அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி, 3 கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

கங்கைகொண்டான் அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி, 3 கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குண்டும் குழியுமான சாலை

நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானை அடுத்த ராஜபதி விலக்கில் இருந்து ராஜபதி, கரிசல்குளம் வழியாக வெங்கடாசலபுரம் வரையிலும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. எனவே அதனை சீரமைக்க வேண்டும். கிராமப்புற பகுதிகளில் சீராக குடிநீர் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராஜபதி, கரிசல்குளம், வெங்கடாசலபுரம் பகுதி மக்கள் நேற்று காலையில் கங்கைகொண்டானை அடுத்த ராஜபதி விலக்கு நாற்கரசாலை பகுதியில் திரண்டு திடீர் மறியலுக்கு முயன்றனர். பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியசாமி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராம மக்கள், ராஜபதி விலக்கு பகுதியில் சாலையோரமாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மானூர் யூனியன் ஆணையாளர் முத்துகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் அமுதா மற்றும் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து மதியம் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story