சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் நெல்லையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் நெல்லையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நெல்லை வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் மாவட்ட தலைவர் செபஸ்தியாள் என்ற ஜெயா தலைமை தாங்கினார்.

மாவட்ட இணைச்செயலாளர்கள் சண்முகசுந்தரி, மருதுபாண்டி, மகபூப்பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பிச்சையா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

காலமுறை ஊதியம்

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் வழங்கும் சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.

தர்ணா போராட்டத்தில் நிர்வாகிகள் செல்வபாக்கியம், கனிமொழி, வீரபாண்டி, ஞானவடிவு, சுமதி, ஜெயலட்சுமி, லட்சுமி, கனகா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநிலச்செயலாளர் பிச்சுமணி தர்ணா போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். மாவட்ட பொருளாளர் ஜெசிந்தா நன்றி கூறினார்.


Next Story