நாளை மறுநாள் தர்ணா போராட்டம்


நாளை மறுநாள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 16 July 2023 2:45 AM IST (Updated: 16 July 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

நாளை மறுநாள் தர்ணா போராட்டம்

நீலகிரி

கோத்தகிரி

தமிழ்நாடு அரசின் அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் வட்டக்கிளை பேரவை கூட்டம், கோத்தகிரியில் நேற்று நடைபெற்றது. இதற்கு துணைத்தலைவர் வில்லியம்ஸ் தலைமை தாங்கினார். செயலாளர் தயாளன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு 21 மாத நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். மருத்துவப்படி ரூ.1,000 வழங்க வேண்டும். 2022-23 ஆண்டிற்கான போனஸ் தொகையை வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியர் உள்ளிட்டோருக்கு ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.


Next Story