நகராட்சி அலுவலகம் முன்பு ஊழியர்கள் தர்ணா போராட்டம்


நகராட்சி அலுவலகம் முன்பு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 28 March 2023 6:45 PM GMT (Updated: 28 March 2023 6:47 PM GMT)

உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை நகராட்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தினக்கூலிகளாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் அலுவலக பணிகளை அவுட்சோர்சிங் மற்றும் கான்ட்ராக்ட் மூலம் நிரப்புவதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களில் 50-க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story