ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது. தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

பொருளாளர் ஞானசேகரன் வரவேற்றார். செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.

போராட்டத்தில், தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயதைக் கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

பணி நிறைவு நாளன்று பணியிலிருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரெயில் பயண சலுகையை மீண்டும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

1 More update

Related Tags :
Next Story