திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

செஞ்சி அருகே திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி அருகே பொன்பத்தி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 9-ந்தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கோவில் அருகே யாக சாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு யாக பூஜை நடத்தது. பின்னர் சிலைகளுக்கு உயிர் தருதல், பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பின்னர் யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் 9.30 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து திரவுபதியம்மன் கோவில் அருகே உள்ள பொன்விநாயகர், லட்சுமி நாராயணன், ஆஞ்சநேயர், அம்மச்சார் அம்மன், ஈஸ்வரர், பச்சையம்மன், செம்பாத்தாஅம்மன், கெங்கை அம்மன், முனீஸ்வரர், கோட்டை முனீஸ்வரர், சப்த கன்னிகள், நாகதேவதைகள் உள்ளிட்ட கோவில் கலசத்திலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் மற்றும் உபயதாரர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story