மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? - முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம்


மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? - முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 24 Sept 2022 2:15 PM IST (Updated: 24 Sept 2022 3:05 PM IST)
t-max-icont-min-icon

மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணியில் 95 சதவீதம் பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் நட்டா ஏன் நிறுத்திக் கொண்டார்?

பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள் தோறும் 1000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே?

பூர்த்தியான இன்னொரு பகுதியில் அறுவை சிகிச்சை அரங்கம் செயல்பட்டு, அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே?

பூர்த்தியான இன்னொரு பகுதியில் மருந்தகம் செயல்பட்டு நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன என்று சொல்லியிருக்கலாமே.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story