டேபிள் மின்விசிறியின் ஓயரை இழுத்தபோதுமின்சாரம் தாக்கி குழந்தை பலி


டேபிள் மின்விசிறியின் ஓயரை இழுத்தபோதுமின்சாரம் தாக்கி குழந்தை பலி
x
தினத்தந்தி 19 Aug 2023 12:30 AM IST (Updated: 19 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வீரணம்பாளையத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் 1 வயது ஆண் குழந்தை கடந்த 9-ந் தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது டேபிள் மின்விசிறியின் ஓயரை பிடித்ததாக தெரிகிறது. அப்போது மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த பெற்றோர் குழந்தையை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அக்குழந்தை கடந்த 16-ந் தேதி இறந்தது. குழந்தைகள் உள்ள வீட்டில் மின்சாதனங்களை குழந்தைகளுக்கு எட்டாத வகையில் வைத்து கவனமாக பார்த்து கொள்வது அவசியம் என்று வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.


Next Story