கணவர் கண்முன்னே நடந்த பரிதாபம்: பால் வேன் மோதி இளம்பெண் பலி


கணவர் கண்முன்னே நடந்த பரிதாபம்:  பால் வேன் மோதி இளம்பெண் பலி
x

கணவர் கண்முன்னே நடந்த பரிதாபம்: பால் வேன் மோதி இளம்பெண் பலி

நாமக்கல்

நாமகிரிப்பேட்டை:

மங்களபுரம் அருகே கணவர் கண்முன்னே பால் வேன் மோதி இளம்பெண் பலியானார்.

கார் டிரைவர்

நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் ஊராட்சி செம்பகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 28). கார் டிரைவர். இவருடைய மனைவி கவுசல்யா (25). இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் மோட்டார்சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

அப்போது மங்களபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த பால் வேன் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன், மனைவி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கவுசல்யா கணவர் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். நீலகண்டன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியதோடு மனைவியின் உடலை கண்டு கதறி அழுதார்.

விசாரணை

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் மங்களபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மங்களபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் படுகாயம் அடைந்த நீலகண்டனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் பலியான கவுசல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கணவர் கண்முன்னே இளம்பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story