புதுச்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு


புதுச்சத்திரம் அருகே  மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு
x

புதுச்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு

நாமக்கல்

ராசிபுரம் அருகே உள்ள சந்திரசேகரபுரம் பெரியூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). லாரி டிரைவர். இவர் புதுச்சத்திரம் அருகே உள்ள தோட்டக்கூர்பட்டியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த கட்டுமான பணியை பார்வையிட சதீஷ்குமார் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் தோட்டக்கூர்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

புதுச்சத்திரம்- ஏளூர்ரோட்டில் வெள்ளாளப்பட்டி பிரிவு அருகே சென்றபோது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சதீஷ்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து அவரது மனைவி பிரியா புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story