பரமத்திவேலூர் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலி 3 பேர் படுகாயம்


பரமத்திவேலூர் அருகே  கார் கவிழ்ந்து வாலிபர் பலி  3 பேர் படுகாயம்
x

பரமத்திவேலூர் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலி 3 பேர் படுகாயம்

நாமக்கல்

பரமத்திவேலூர்:

சேலம் மாவட்ட பகுதியை சேர்ந்தவர் சசீந்திரன். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலு (28). வீசாணம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (37). இவர்கள் 3 பேரும் தூத்துக்குடியில்‌ உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (28). இவர் 3 பேரின் அறையில் தங்கி டி.என்.பி.சி. படித்து வந்தார்.

இவர்கள் 4 பேரும் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு மீண்டும் தூத்துக்குடி செல்ல சுசீந்திரன் என்பவரது காரில் நேற்று இரவு நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பரமத்திவேலூர் அனிச்சம்பாளையம் பிரிவு சாலை அருகே சென்றபோது சாலையை கடக்க முயன்றவர் மீது மோதாமல் இருப்பதற்காக காரை ஓட்டிய சுசீந்திரன் பிரேக் போட்டுள்ளார்.

இதில் கார்‌ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறம் உள்ள 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அதில் தியாகராஜன் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story