மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி


மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி
x

மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 29). இவர் வேலை தொடர்பாக சாமல்பட்டி பகுதிக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி பிரபு ஊத்தங்கரை- போச்சம்பள்ளி சாலையில் போர்காலப்பள்ளி பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்று பிரபு ஓட்டிசென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story