மத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு


மத்தூர் அருகே  கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு
x

மத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் இறந்தார்.

கிருஷ்ணகிரி

மத்தூர்:

மத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் இறந்தார்.

அறுவை சிகிச்சை

மத்தூர் அருகே உள்ள கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். விவசாயி. இவருடைய மனைவி கண்ணகி (வயது 50). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் அவருக்கு அவ்வப்போது மனநல பாதிப்பும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்ற கண்ணகி பின்னர் வீடு திரும்பவில்லை.

இதற்கிடையே கவுண்டனூர் கிராமத்தில் கிணறுகள் அதிகளவில் உள்ளதால் நீண்ட தூரம் நடக்க முடியாத கண்ணகி கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்று கருதி பல்வேறு கிணறுகளில் தேடினர்.

விசாரணை

இந்த நிலையில் சம்பத் தனது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் மோட்டாரை போடுவதற்காக சென்றார். அப்போது கிணற்றில் தனது மனைவி கண்ணகியின் உடல் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். அவர் இதுதொடர்பாக மத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்ணகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் விவசாய நிலத்துக்கு சென்ற கண்ணகி கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்துள்ளது. எனினும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story