கிருஷ்ணகிரி அருகே கார் மோதி ஒருவர் பலி யார் அவர்? போலீஸ் விசாரணை


கிருஷ்ணகிரி அருகே  கார் மோதி ஒருவர் பலி  யார் அவர்? போலீஸ் விசாரணை
x

கிருஷ்ணகிரி அருகே கார் மோதி ஒருவர் பலி யார் அவர்? போலீஸ் விசாரணை

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் மேம்பாலம் உள்ளது. இதன் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் 5½ அடி உயரம். மெரூன் நிற சட்டையும், கருப்பு நிற பேண்டும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story