மோகனூர் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து தூய்மை பணியாளர் பலி


மோகனூர் அருகே  பஸ்சில் இருந்து தவறி விழுந்து தூய்மை பணியாளர் பலி
x

மோகனூர் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து தூய்மை பணியாளர் பலி

நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் படையாட்சி நகரை சேர்ந்த தனபால் மனைவி கனகா (வயது 60) நாமக்கல் அருகே லத்துவாடி கால்நடை மருத்துவக்கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கனகா மோகனூரில் இருந்து கால்நடை மருத்துவ கல்லூரிக்கு வேலைக்கு தனியார் பஸ்சில் சென்றார். அப்போது நிறுத்தம் வந்தததும் கனகா பஸ்சை விட்டு இறங்கும் முன் டிரைவர் பஸ்சை எடுத்ததாக தெரிகிறது.

இதில் எதிர்பாராதவிதமாக கனகா தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கனகா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவருடைய மகன் மூர்த்தி மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story