நாமகிரிப்பேட்டை அருகே மரத்தில் லாரி மோதி கிளீனர் பலி
நாமகிரிப்பேட்டை அருகே மரத்தில் லாரி மோதி கிளீனர் பலி
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை அருகே மரத்தில் லாரி மோதி கிளீனர் பலியானார்.
மரத்தில் மோதியது
நாமக்கல்லை சேர்ந்தவர்கள் நடேசன் (வயது 70). லாரி டிரைவர். மணி (50). கிளீனர். இவர்கள் நேற்று ஒரு லாரியில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் பொருட்களை இறக்கி விட்டு பின்னர் ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது நாமகிரிப்பேட்டை ஒன்றியம் கார்கூடல்பட்டி ஊராட்சி ேகாணப்பாதை என்ற இடத்தில் சென்றபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி அந்த பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.
விசாரணை
இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி கிளீனர் மணி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நடேசன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஆயில்பட்டி போலீசார் பலியான மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான மணிக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.