நல்லம்பள்ளி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி தச்சு தொழிலாளி பலி
நல்லம்பள்ளி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி தச்சு தொழிலாளி பலி
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தச்சு தொழிலாளி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
தச்சு தொழிலாளிகள்
நல்லம்பள்ளி அருகே உள்ள ஊத்துப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (வயது 24), மோகன் (26). தச்சு தொழிலாளிகள். இவர்கள் நேற்று மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையாக சேலம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரி நோக்கி சென்றனர்.
அப்போது குடிப்பட்டி மேம்பாலம் அருகே சென்றபோது, பின்னால் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
விசாரணை
இந்த விபத்தில் தூக்கி விசப்பட்டதில் மணிகண்டன் மற்றும் மோகன் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் அலறி துடித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். மோகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.