நாமக்கல் அருகேமோட்டார்சைக்கிள் மீது வாகனம் மோதி போலீஸ்காரர் பலி


நாமக்கல் அருகேமோட்டார்சைக்கிள் மீது  வாகனம் மோதி போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் அருகே மோட்டார்சைக்கிள் மீது வாகனம் மோதி போலீஸ்காரர் பலியானார்.

போலீஸ்காரர்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள இடையாறை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் சரவணன் (வயது 35). இவர் கடந்த 2016-ம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்தார். தற்போது சென்னையில் உள்ள ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் சரவணன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் பரமத்தி சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் அருகே மறவாபாளையம் பைபாஸ் சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

விசாரணை

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சரவணனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சரவணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சரவணனுக்கு ராசி (33) என்ற மனைவியும், கார்முகிலன் (5), அகிலன் (1) ஆகிய 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story