கார் மோதி மூதாட்டி பலி


கார் மோதி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே உள்ள தேவர்முக்குளத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 67). இவர் கடந்த 31-ந் தேதி கிருஷ்ணகிரி- தர்மபுரி சாலையில் திம்மாபுரம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் தனலட்சுமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தனலட்சுமி இறந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story