வடமாநில எலக்ட்ரீசியன் திடீர் சாவு


வடமாநில எலக்ட்ரீசியன் திடீர் சாவு
x
தினத்தந்தி 14 March 2023 12:30 AM IST (Updated: 14 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

இமாசலபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்குமார் (வயது 51). இவர் ஓசூர் பேரண்டப்பள்ளி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். கடந்த 11-ந் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவர் தூங்கினார். இந்த நிலையில் அவரை சக ஊழியரை எழுப்ப முயன்ற போது இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story