ஓசூர் அருகேதலையில் கல் விழுந்து மூதாட்டி பலி


ஓசூர் அருகேதலையில் கல் விழுந்து மூதாட்டி பலி
x
தினத்தந்தி 18 March 2023 12:30 AM IST (Updated: 18 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

மத்திகிரி:

ஓசூர் அருகே தலையில் கல் விழுந்து மூதாட்டி பலியானார்.

மூதாட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா கொத்தூரை சேர்ந்தவர் முனி எல்லம்மா (வயது 70). இவர் ஆஸ்பெட்டாஸ் ஷீட்டால் ஆன வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முனதினம் அவர் வீட்டில் இருந்தார். அந்த நேரம் தண்ணீர் தொட்டியில் இருந்து கல் ஒன்று உடைந்து ஆஸ்பெட்டாஸ் ஷீட் மீது விழுந்ததுடன், அங்கிருந்த முனி எல்லம்மா மீதும் விழுந்தது. இதில் காயமடைந்த முனி எல்லம்மாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டார்.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மத்திகிரி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலையில் கல் விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story