நாமக்கல்லில் ரெயில் மோதி பெண் சாவு


நாமக்கல்லில் ரெயில் மோதி பெண் சாவு
x
தினத்தந்தி 11 April 2023 12:04 AM IST (Updated: 11 April 2023 12:48 PM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல்- துறையூர் சாலை ரெயில்வே மேம்பாலம் அருகில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயில்வே பாதை ஓரமாக பிணமாக கிடந்தார். கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து போனவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ரெயில்வே பாதையை கடக்க முயன்றபோது சரக்கு ரெயில் மோதி இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story