நல்லம்பள்ளி அருகேதென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி சாவு
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 49). விவசாயி. இவருக்கு திருமணமாகி இன்பவள்ளி என்ற மனைவியும், புவனேஸ்வரி என்ற மகளும், கேசவன் என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் புவனேஸ்வரிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
இதற்காக வீட்டின் முன் பந்தல் அமைப்பதற்காக நேற்று முன்தினம் சண்முகம் விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தென்னை ஓலை மட்டை வெட்ட முயன்றார். அப்போது எதிர்பாரதவிதமாக அவர் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.