பென்னாகரம் அருகேவிபத்தில் காய்கறி வியாபாரி சாவு


பென்னாகரம் அருகேவிபத்தில் காய்கறி வியாபாரி சாவு
x
தினத்தந்தி 30 April 2023 7:00 PM GMT (Updated: 30 April 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சாலை குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43). காய்கறி வியாபாரி. இவர் தர்மபுரி அருகே சங்கம்பட்டியில் உள்ள உறவினரின் வீட்டில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பின்னர் மாலை வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது கெட்டூர் பிரிவு ரோடு வளைவில் மோட்டார் சைக்கிளை திருப்பியபோது திடீரென நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சக்திவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story