பாலக்கோடு அருகேமாடியில் இருந்து தவறி விழுந்து பிளஸ்-1 மாணவி பலி
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து பிளஸ்-1 மாணவி பலியானார்.
பிளஸ்-1 மாணவி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கக்கன்ஜிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கட்டிட மேஸ்திரி. இவருடைய மகள் திவ்யதர்ஷினி (வயது 16). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மேலும் பள்ளிக்கூடத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில் ேதர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால் திவ்யதர்ஷினி ஊருக்கு வந்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாணவி வீட்டு மாடியில் துணியை காய வைக்க சென்றார். அப்போது அவர் கால்தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
விசாரணை
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திவ்யதர்ஷினி நேற்று இறந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடியில் இருந்து தவறி விழுந்து பிளஸ்-1 மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.