சேந்தமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு


சேந்தமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 4 July 2023 12:30 AM IST (Updated: 4 July 2023 11:18 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு.

நாமக்கல்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலத்தில் உள்ள காமராஜபுரத்தை சேர்ந்தவர் ராம்ராஜ் என்ற செல்வகுமார் (வயது 33). கூலித்தொழிலாளி. இவர் வேலைக்கு சென்றுவிட்டு அடிக்கடி வீட்டுக்கு வராமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற ராம்ராஜ் வீடு திரும்பவில்லை. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே நேற்று சின்னபள்ளம் பாறை கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள விவசாய கிணற்றில் ராம்ராஜ் பிணமாக மிதந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சேந்தமங்கலம் போலீசார் ராமராஜனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதையடுத்து இறந்தது ராம்ராஜ் தான் என்பதை அவரது சகோதரர் மணிகண்டன் உறுதி செய்தார். பின்னர் போலீசார் ராம்ராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் ராம்ராஜ் அந்த கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story