சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு


சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு
x

புகையிலை பொருட்கள் கடத்திய குற்றவாளிகள் கைது செய்து சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு தொிவித்தாா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாதா கோவில் பஸ் நிறுத்தம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்திச்சென்றதை கண்டறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படையை சேர்ந்த பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆனந்தராஜ், நமச்சிவாயம், ஏட்டு இஸ்மாயில், போலீஸ்காரர்கள் ராஜ்குமார், பிரபாகரன், பழனி ஆகியோர் பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். அதேபோல் விழுப்புரம் ராஜேஸ்வரி நகர் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்ட புகையிலை பொருட்களை விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபி, மணி, ஏட்டு ராம்குமார் ஆகியோர் பறிமுதல் செய்து குற்றவாளியை கைது செய்தனர். மேலும் கஞ்சனூர் அருகே அன்னியூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை இன்ஸ்பெக்டர் எழிலரசி, போலீஸ்காரர்கள் ஹரிராஜன், ஸ்ரீதர், தயாநிதி, செல்லப்பன் ஆகியோர் பறிமுதல் செய்து குற்றவாளியை கைது செய்தனர்.

மேற்கண்ட சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் பாராட்டி அதற்கான பாராட்டு சான்றிதழை வழங்கினர்.


Next Story