டிஐஜி விஜயகுமார் தற்கொலை - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல்


டிஐஜி விஜயகுமார் தற்கொலை - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல்
x

டிஐஜி விஜயகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

கோவை சரக காவல்துறை துணைத்தலைவராக பணியாற்றி வந்த துடிப்பான இளம் அதிகாரி விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. விஜயகுமார் பணியாற்றிய இடங்களில் எல்லாம் தமது சிறப்பான செயல்களால் முத்திரைப் பதித்தவர்.

காவல்துறையை பணியாக நினைக்காமல் வாழ்க்கையாக நினைத்தவர். குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற அவர், தமக்கு இ.கா.ப தவிர வேறு எந்த பணியும் தேவையில்லை என்று கூறி கேட்டுப் பெற்றவர்.

காவல்துறையில் பணியாற்றும், காவல்துறையில் சேர விரும்பும் ஏராளமான இளைஞர்களின் நாயகனாக விளங்கியவர். காவல் அதிகாரி விஜயகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



1 More update

Next Story