வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டியதால் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி


வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டியதால் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி
x

வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

செங்கல்பட்டு

சாலையின் குறுக்கே பள்ளம்

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையின் குறுக்கே ரத்தினமங்கலம் என்ற இடத்தில் நேற்று எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் மழை நீர் செல்லும் வகையில் கால்வாய் அமைத்து சிறிய பாலம் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டி கொண்டிருந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

இதன் காரணமாக ரத்தினமங்கலம் பகுதியில் வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்களும் கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் நோக்கி செல்லும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.இது மட்டுமின்றி அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு போலீசார் யாருமில்லாததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நீண்ட நேரம் போக்குவரத்தில் சிக்கி பெரிதும் அவதிப்பட்டனர்.

கோரிக்கை

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்:-

ரத்தினமங்கலம் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் மழை நீர் செல்லும் வகையில் கால்வாய் பணி நடைபெறுவதால் பணி முடியும் வரை அந்த வழியாக செல்லும் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விடுவதற்கும் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story